இடுகைகள்

டாக்டர். தா.ஏ.ஞானமூர்த்தி என்றொரு பேராசான்

படம்
  நூலறிபுலவர், சிந்தாமணிச்செம்மல், டாக்டர். தா.ஏ.ஞானமூர்த்தி.        “மன்னா உலகத்து மன்னுதல்குறித்தோர் தம்புகழ் நிறஇத் தாமாய்ந்தனரே” எனும் சங்கச் சான்றோர் வாக்கிற்கிணங்க தண்ணார் தமிழ் வளர்த்த சான்றோராய், நிலையில்லா இந்நிலவுலகில் தம்புகழ் உருவினை நிலை பெறச்செய்து மறைந்தவர் தமிழ்ப்பேராசிரியர் டாக்டர் தா.ஏ.ஞானமூர்த்தி  அவர்களாவர். புகழுடைய வாழ்வினராய் எடுத்துக்காட்டான வாழ்வினராக விழுமிய வாழ்வு வாழ்ந்தவர் அவர். அன்பு அருளாய்க் கனிந்த அவரின் வாழ்வு இளைஞர்கள் போற்றிப் பின்பற்றத்தக்க உயரிய வாழ்வு. இத்தகு சிறப்புக்குரிய டாக்டர் தா.ஏ.ஞானமூர்த்தி அவர்களின் சீரிய வாழ்வியலையும் குன்றாச் சிறப்புக்களையும் விளக்கும் பொருட்டு எழுந்ததே இக்கட்டுரை என்க. பெருமைப் பண்புடையோர்  : ‘உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே’ என்பதை அடியெற்றி உயர்ந்தோராக வாழ்ந்தவரின் வாழ்வே வாழ்க்கைக் கலையாகவும் வாழ்வாங்கு வாழும் வாழ்க்கையாகவும் போற்றப்பெறும். இவ்வுலகிற் பலர் எவ்விதப் புகழுமின்றி  ஒவ்வொரு கணமும் மறைகின்றனர். அவர்கள் அனைவரும் பெரியோர...